விஷமமான பெற்றோர் – ஷிவானி தாய்க்கு எதிராக ட்வீட் போட்ட பிரபல இயக்குனர்.

0
7401
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் Freeze Task துவங்கப்பட்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்.நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜியை சந்திக்க அவரது சகோதரரும் சந்திக்க ஷிவானியை அவரது அம்மாவும் வந்திருந்தார்கள் இதில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா சிவானி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் டி எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்தர, உனக்குன்னு ஒரு தனித்தன்மை கிடையாதா. எப்ப பாத்தாலும் அவன் என்ன சொல்றானோ அத தான் செய்வியா?

- Advertisement -

இதுக்கு தான் உள்ள வந்திய ? இந்த 85 நாள்ல நீ என்ன பண்ணணுன்னு சொல்லு. இது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜோடியா ஆட இது ஒன்னும் ஜோடி நிகழ்ச்சி கிடையாது. உன்னால ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் அசிங்கப்படுறோம். ஆரி, உனக்கு என்ன பேக்கேஜ் வச்சாரு, அவரு எத்தன தடவ சொன்னாரு தனியா விளையாடுன்னு. ஆனா, அவன் யார நாமினேட் பன்றானோ அவன தான் நீ நாமினேட் பண்ணற.உனக்குன்னு ஒரு புத்தி இல்ல என்று கண்ட மேனிக்கு ஷிவானியை திட்டத் தீர்த்த ஷிவானியின் தாயார், ஆரியிடம் நீங்க சூப்பரா விளையாடுறீங்க என்று கூறினார்.

மேலும், இறுதி வரை பாலாஜியிடம் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஷிவானியின் அம்மா என்ட்ரிக்கு பின்னர் ஷிவானியின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. மேலும், பலர் ஷிவானியின் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு சிலர் ஷிவானியின் அம்மா செய்தது தவறு என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் பட இயக்குனர், சி எஸ் அமுதன், செய்துள்ள டீவீட்ல் சரி. பிக் பாஸ்ஸை பார்க்க நேர்ந்தது. இது மிகவும் நச்சு பெற்றோர் துஷ்பிரயோகத்தை தெளிவாக இயல்பாக்குகிறது. இல்லை, இது போன்ற கண்டண்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement