கமல் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியான ஷிவானி – இப்போ புரியுது அந்த Bmw கார் எப்படி வந்துச்சின்னு.

0
5256
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

-விளம்பரம்-

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : அமைச்சரையே ஆட்டி வைத்த நடிகை – தன் புகைப்படத்திற்கு வந்த கமெண்டுக்கு கொடுத்த பதிலடி.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் கூட வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடிக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஷிவானி பஹத் பாசிலுக்கு ஜோடியாக கமிட் ஆகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் ஷிவானி Bmw கார் ஒன்றை வாங்கி இருந்தார். ஒரே வேலை இந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் தான் வாங்கி இருப்பாரோ என்று பலர் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement