தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவானி - கேக் ஊட்டிய பாலாஜி. வைரலாகும் புகைப்படம்.

By ·

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி - முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி - பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இதையும் பாருங்க : சன் பிக்சர்ஸ்ல நடிக்க தான் இப்படி எல்லாம் பண்ற - கேலி செய்த்தவருக்கு பிரியா பவானி சங்கர் பதிலடி.

அதிலும் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்தே போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸை பார்த்து இனிமேல் ஷிவானி, பாலாஜி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார் ஷிவானி. சமீபத்தில் கூட தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார். இந்த கொண்டாட்டத்தில் பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்துகொண்டு இருந்தனர்.

அதே போல அடிக்கடி ஷிவானி, சம்யுக்தாவுடன் இணைந்து வீடியோ பதிவிடுவதை ஷிவானி வாடிக்கையாக வைத்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இன்று (ஏப்ரல் 5) தனது 20வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஷிவானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜியும் கலந்துகொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கு அவரது அம்மா முன்பே பாலாஜி கேக் ஊட்டியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full