சன் பிக்சர்ஸ்ல நடிக்க தான் இப்படி எல்லாம் பண்ற – கேலி செய்த்தவருக்கு பிரியா பவானி சங்கர் பதிலடி.

0
778
stalin
- Advertisement -

சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி பா ஜ கவினரின் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளகியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

-விளம்பரம்-

முதன் முறையாக முதலமைச்சராக பதிவு ஏற்கப்போகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதிலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பவானி சங்கர், ஸ்டாலனிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின். அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பல மாதங்களுக்கு முன், திருமுருகன் காந்தியை வெளியிட வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் போட்ட பதிவை பதிவிட்டு ட்விட்டர் வாசி ஒருவர், அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான? என்று கேலி செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி, பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான. இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவை ரீ ட்வீட் செய்த பயனர் ஒருவர் முட்டாள் தனமான வாதம். முதல்வரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள பிரியா பவானி சங்கர் take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது.6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir.மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர், ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல என்று கூறியுள்ளார்.

Advertisement