என் அம்மா என்னை திட்டியதற்கு காரணம் இதான் – அதனால் தான் அமைதியாக இருந்தேன். முதன் முறையாக மனம் திறந்த ஷிவானி.

0
5260
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் என்னெற்றே விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதில் ஷிவானியும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.

-விளம்பரம்-

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஆனால், சமூக வலைதளத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு பிக் பாஸில் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும். அதே போல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும், ஷிவானி – பாலா காதல் கதையும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

- Advertisement -

அதிலும் ஷிவானி அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்தே போது ஷிவானிக்கு அவர் விட்ட டோஸை பார்த்து இனிமேல் ஷிவானி, பாலாஜி பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டார் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அதன் பின்னரும் பாலாஜியிடம் சகஜமாக தான் பேசி வந்தார். பிக் பாஸ் ப்ரீஸ் டாஸ்க்கின் போது முதல் ஆளாக இதில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா சிவானி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார்.உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் டி எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்தர, உனக்குன்னு ஒரு தனித்தன்மை கிடையாதா. எப்ப பாத்தாலும் அவன் என்ன சொல்றானோ அத தான் செய்வியா?இதுக்கு தான் உள்ள வந்திய ? இந்த 85 நாள்ல நீ என்ன பண்ணணுன்னு சொல்லு.

This image has an empty alt attribute; its file name is 1-165-569x1024.jpg

இது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜோடியா ஆட இது ஒன்னும் ஜோடி நிகழ்ச்சி கிடையாது. உன்னால ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் அசிங்கப்படுறோம் என்று கண்ட மேனிக்கு திட்டித்தீர்த்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷிவானி, இதுகுறித்து பேசுகையில், என்னைக்கும் அவர் என்னை திட்டியது கிடையாது. ஆனால், அவரே என்னை திட்டினார்கள் என்றால் நான் அவரை எந்த அளவிற்கு ஏமாற்றி இருக்கிறேன் என்று புரிந்தது. அவர் எந்த அளவிற்கு காயம் அடைந்து இருப்பார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர் சொன்னால் நம்ம நல்லதுக்காக தான் இருக்கும் என்று நான் எதுவும் பேசவில்லை.

-விளம்பரம்-
Advertisement