ஷிவினுக்கு புரமோஷன் செய்ய சம்பளம் கொடுக்கப்படுகிறதா ? உளறி கொட்டிய நண்பர். வைரலாகும் வீடியோ.

0
636
shivn
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று பிரீஸ் டாஸ்க் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் பலரும் அவர் அவர் குடும்பத்தை சந்தித்த நிலையில் ஷிவின் கணேஷை சந்தித்த அவரது நண்பர்கள் கூறிய உண்மை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதி மாதத்தை நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனலட்சிமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் பிக் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் freeze டாஸ்க் துவங்கியுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பார்கள். அந்த வகையில் தொடக்கத்தில் மைனா நந்தினியின் கணவர் மற்றும் குழந்தை வீட்டிற்குள் வந்த பிறகு அமுதவாணனின் குடும்பம் வந்தது அதில் பல கலகலப்பான நிகழ்வுகள் நடந்தன. இந்த நிலையில் ஷிவின் கணேஷனின் நன்பர்கள் கலந்து உள்ளே வந்திருந்த நிலையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஷிவினுடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த போது அவரது தோழி ஷிவினிடம் நீ எதை பற்றியும் கவலை பட வேண்டும். நீ நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிராய். இதே போன்று நீ விளையாடினாள் போதும் என்று கூறியிருந்தார். அப்போது அவரது நண்பர் உணக்காகத்தான் இவள் வெளியில் வேலை செய்து கொண்டிருக்கிறார் என கூறும் போது அவர் அதனை உடனே மாற்றி அதனை சொலலாதே என்று கூற அவர் உடனே சுதாரித்து கொண்டார்.

-விளம்பரம்-

இதிலிருந்து தெரிய வருவது பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடும் போட்டியாளர்களுக்கு வெளியில் ஒரு குழு அவர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று. இதே போன்றுதான் ஒரு முறை மணிகண்டன் நான் வெளியில் சென்று விடுவேன் என்று கூறிக்கொண்டிருக்க குயின்சி நீ ஏன் கவலை படுகிறாய் உனக்காகதான் என்னுடைய குழு வெளியில் வேலை செய்யும் என்று கூறியதும் குறிப்பிடதக்கது.

Advertisement