10 வாரங்களில் ஒரு முறை கூட நாமினேஷனில் வரவில்லை – கலக்கும் அந்த போட்டியாளர்.

0
342
- Advertisement -

பத்து வாரங்களைக் கடந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாமினேஷனில் வராமல் இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகிய வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 67 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த முறையும் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 10 போட்டியாளர்கள் போக தற்போது 11 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இதுவரை பத்து வாரங்களை நிகழ்ச்சி கடந்து இருக்கிறது. போட்டியில் டாஸ்க்கள் எவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறதோ அதேபோல் நாமினேஷனும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

பிக் பாஸ் நாமினேஷன்:

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து நாமினேஷனில் இடம்பெறாத போட்டியாளர் குறித்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 21 போட்டியாளர்களில் சில பேர் பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒருமுறை கூட நாமினேஷனில் இடம்பெறாத நபர் சிவின் கணேசன். இந்த முறை நிகழ்ச்சியில் சிவின் கணேசன் என்ற திருநங்கை கலந்து கொண்டு இருக்கிறார். இவர் வீட்டுக்கு ஒரே பையன்.

-விளம்பரம்-

சிவின் கணேசன்:

இவர் திருநங்கையாக மாறியவுடன் இவருடைய விருப்பத்திற்கு வீட்டில் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் இவர் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார். சில ஆண்டுகள் இவர் அங்கேயே இருந்தார். அதற்குப் பின்னர் இவர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால், இவர் திரும்பி வந்ததை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு இவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்கவில்லையாம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்று எதிர்பார்த்து இந்த நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிவின் கணேசன் மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார்.

shivin

பிக் பாஸ் வீட்டில் சிவின் கணேசன்:

இவர் பல அவமானங்கள், கிண்டல்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு தைரியமாக விளையாடி வருகிறார். இவர் நிகழ்ச்சியில் எல்லா டாஸ்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனித்துவமாக தெரிகிறார். அதுமட்டுமில்லாமல் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளில் தலையிட்டு தன்னுடைய நியாயமான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. கடுமையான போட்டியாளர்கள் மத்தியில் நாமினேஷனில் சிவின் இடம்பெறாது இருப்பது ஒரு பெரிய ஆச்சரியமான ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் சிவின் நாமினேஷனில் இடம்பெற்றாலும் முதலாளாக அவரைக் காப்பாற்றப்படுவதும் உறுதி தான். சிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று டைட்டில் வின்னர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement