இந்த டம்மி பீசுங்கள வெளிய அனுப்புங்க – கடுப்பான நடிகர் பரத். ஏன்னு பாருங்க ?

0
99320
barth
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து கிட்டத்தட்ட பாதி சீசனையே நிறைவு செய்து விட்டது. ஆனால் ஒரு சில போட்டியாளர்களை தவிர மற்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஜித்தன் ரமேஷ், ஆஜீத், ஷிவானி போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. அவ்வளவு ஏன் கடந்த வாரம் அஜித் கேப்டனாக இருந்தபோது கூட கமல் பேசும்போது ஆஜீத் ஏதோ பேசினார். அதற்கு நடிகர் கமலே இதுதான் கேப்டனின் குரல் கேட்டுக்கோங்க என்று மறைமுகமாக அஜித்தை கலாய்த்து இருந்தார்.

அதேபோல சிவானி பாலா பின்னால் சுற்றுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும் விமர்சித்து வரும் ரசிகர்கள் நிஷா, ரியோ மற்றும் அர்ச்சனாவின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்றும் ஜித்தன் ரமேஷ் யார் பக்கம் இருக்கிறார் என்பதே குழப்பமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள் இப்படி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் நடிகர் பரத் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில்,எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிக்பாஸில் இருந்து அனைத்து டம்மி பீசுகளையும் வெளியேற்றி விடுங்கள். ஏனென்றால் அவர்களிடத்தில் நான் எந்த ஒரு கண்டன்டையும் பார்க்க முடியவில்லை என்று பதிவிட்டு விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து #justsaying #fanofbigbosstamil என்று ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார் பரத்.

பரத்தின் இந்த பதிவிற்கு கீழே கமன்ட் செய்துள்ள நடிகர் பிரேம் ஜி, நாம் இருவரும் உள்ளே செல்லலாமா என்று கூறியிருந்தார் அதற்கு பரத் நீங்கள் போக விரும்புகிறீர்களா என்று பதிலளிக்க அதற்கு பிரேம்ஜி உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே என்று பதிவிட்டிருக்கிறார். அதேபோல பரத்தின் இந்தப் பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் சொன்ன அந்த டம்மி பீஸ் ஆஜித், சிவானி, ரமேஷ், நிஷா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பரத் உண்மையில் யாரை டம்மி பீஸ் என்று குறிப்பிட்டு இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

-விளம்பரம்-
Advertisement