ச்ச்சீ, இவங்கெல்லாம் கேவலமா இருக்காங்க – பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீரெட்டி.

0
931
srireddy
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 50 நாட்களை கடந்து விட்டது ஆனால் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. சொல்லப்போனால் கடந்த மூன்று சீசன் களை விட இந்த சீசன் தான் மிகவும் மோசமாக சென்று கொண்டு இருக்கிறது என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. 50 நாட்களை கடந்த நிலையிலும் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் அப்படியே இருக்கின்றார்கள். இருப்பினும் பெரிதாக சுவாரசியம் ஏற்படவில்லை. இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபல நடிகையான ஸ்ரீ ரெட்டி பேட்டி ஒன்றில் வறுத்து எடுத்து உள்ளார்.

-விளம்பரம்-
srireddy

தெலுங்கு சினி உலகை சில காலமாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற ட்விட்டரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வந்தார். அதில் சில தென்னிந்திய சினிமாவின் முக்கிய நாபர்களும் அடக்கம். தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழில் முருகதாஸ், விஷால், லாரன்ஸ் என்று பல்வேறு பிரபலங்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்திவந்தார்.

- Advertisement -

ஏற்கனவே பல நடிகர், இயக்குணர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவரங்களை புட்டு புட்டு வைத்து வரும் ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களுக்கு முன்னர் பாகுபலி புகழ் ராணா டகுபதியின் தம்பி அபிராம் டகுபதி தன்னை பல முறை ஸ்டுடியோவில் வைத்து தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக பதிவிட்டு அனைத்து தெலுகு சினிமாவையும் அதிறவைத்தார். 

வீடியோவில் 12 நிமிடத்தில் பார்க்கவும்

தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீ ரெட்டி இடம் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கேவலமான ஒரு நிகழ்ச்சி தற்போது அதில் இருக்கும் அனைவரும் கேவலமாக நடந்து கொண்டு வருகிறார்கள் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பிரபலங்களை தான் போடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. அதிலும் அரை குறை ஆடை அணிந்து கொண்டு ஒரு சிலர் கேவலமாக நடந்து கொண்டு வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

-விளம்பரம்-
Advertisement