படத்தில் பயன்படுத்திய பொருளை பிக் பாஸ் பிரபலத்துக்கு கொடுத்துள்ள அஜித் - விலை எவ்ளோ தெரியுமா ?

By Manikandan · 19/12/2022

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். இந்நிலையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக முறை கேப்டனாக வந்த போட்டியாளர். இந்த வாரமும் இவர் எஸ்கேப் - இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

துணிவு படம் :

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இந்த கதையில் அஜித் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

படத்தின் கதை :

துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்த பாடலை வைசாக் எழுதி இருக்கிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் துணிவு படம் வரும் பொங்கலன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.

சிபிக்கு கிப்ட் கொடுத்த அஜித் :

Tamil Behind Talkies AMP · Quick view
View full