சகிக்க முடியவில்லை, லாஸ்லியாவை விட ஜூலி எவ்வளவோ மேல்.! கழுவி ஊற்றிய முன்னாள் பிக் பாஸ் வெற்றியாளர்.!

By Rajkumar · 6/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ஆரம்பத்தில் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

ஆரம்பத்தில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்களும் ஆர்மியும் இருந்து வந்தன. ஆரம்பத்தில் மிகவும் சாதுவான பெண்ணாக இருந்த இவர் தற்போது அடாவடியாக நடந்து வருகிறார். இதனால் பலரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த சினேகன் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

இதையும் பாருங்க : நீ தா அரமிக்கர.! எதிர் பார்த்தபடி ஆரம்பித்த லாஸ்லியா சாக்க்ஷி சண்டை.! 

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார் சினேகன். அப்போது ரசிகர் ஒருவர், லாஸ்லியாவா ? ஜூலியா ? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சினேகன், என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர் என்று கூறியுள்ளார்.

மேலும், லாஸ்லியாவிடம் நீங்கள் என்ன சொல்ல விம்புவீங்க என்ற கேள்விக்கு, சகிக்க முடியவில்லை என்று பதிலளித்துள்ளார் சினேகன். மேலும், அவசியம் என்றால் அர்த்தம் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அவர்கள் இந்த போட்டியில் இருப்பதற்கும் எந்த அவஷியமும் இல்லை என்று கிண்டலடித்துள்ளார் சினேகன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

behindtalkies AMP · Quick view
View full