பிக் பாஸில் இருந்து வெளியேறிய சினேகன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க – இவர விட மாட்டார் போல.

0
450
snehan
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருந்தார். அவரை தொடர்ந்து சுஜா வருணி, அபிநய், ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில் கடந்த வாரம் பாலாஜி வெளியேறி இருந்தார். ஆனால், வனிதா தமாகவே வெளியேறினார். பின் நிகழ்ச்சியில் சதீஸ்,ரம்யா பாண்டியன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தார்கள். மேலும், 6 வாரங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் 6ஆம் வார நாமினேஷன் நடைபெற்றது.

- Advertisement -

கடந்த வாரம் நிகழ்ச்சியில் நாமினேட் ஆனவர்கள்:

இதில் இந்த வாரம் கேப்டன் நிரூப்பை தவிர சினேகன், சுருதி, பாலாஜி, ஜூலி ஆகிய 4 பேர் மட்டுமே இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்தனர். பின் ஓட்டிங் அடிப்படையில் இந்த வாரம் சினேகன் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சினேகன் வெளியேறி இருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் சினேகனுக்கு சரியான ரீச் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சினேகன்:

இதனால் இவர் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த பிறகு சினேகன் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வெளியேறிய தாடி பாலாஜி, வனிதா ஆகியோரை நேரில் சந்தித்து இருக்கிறார். அவர்களுடன் எடுத்த புகைப்படம் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சினேகனின் திரைப்பயணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வாத்தியார் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக திகழ்கிறார் சினேகன். இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்தும் உள்ளார் சினேகன்.

சினேகன் திருமணம்:

பின் இவர் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். இந்த சீஸினில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார்.

Advertisement