திருமணம் முடிந்த மறுநாளே இப்படி ஒரு சர்ப்ரைஸ் – மிகிழ்ச்சியில் சினேகன் பதிவிட்ட பதிவு. என்ன விஷேசம் பாருங்க.

0
4680
snegan
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்துவந்துள்ளனர்.

இதையும் பாருங்க : முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி, தற்போது சப் கலெக்கடர் – பிரபல தமிழ் காமெடி நடிகரின் மகனுக்கு குவியும் வாழ்த்து.

- Advertisement -

இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின் தனது காதல் மனைவி வந்ததுக்கு பின்னர் தனக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளதை பற்றி பதிவிட்டுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-5-522x1024.jpg

இதுகுறித்து பதிவிட்டுள்ள சினேகன், திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement