கமல் தலைமையில் காதலிக்கு தாலி கட்டிய சினேகன் - எக்ஸ்குளுசிவ் திருமண வீடியோ இதோ
பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
https://www.youtube.com/watch?v=CG-IPE-q1A4
ஆனால், பலரும் சினேகன் தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று கூறினர். அதே போல நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன்.தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார். பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சினேகன்.
இதையும் பாருங்க : தன் வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பித்த வேம்புலி - அஜித்திடம் இருந்து அன்று இரவவே வந்துள்ள போன் கால்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இப்படி ஒரு நிலையில் சினேகனுக்கு இன்று நடிகை கன்னிகாவுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்துவந்துள்ளனர்.
https://twitter.com/chettyrajubhai/status/1420629716181000195
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்க தனது கட்சி தலைவரின் தலைமையில் தனது காதலிக்கு தாலி கட்டினார் சினேகன். சினேகனின் திருமண வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.