தன் வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பித்த வேம்புலி – அஜித்திடம் இருந்து அன்று இரவே வந்துள்ள போன் கால்.

0
3045
john
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-76.png

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல இந்த படத்தின் மெயின் வில்லனாக நடித்த வேம்புலி கதாபாத்திரமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் பாருங்க : ஒரு பட்டன் கூட இல்லாத உடை – அட்டை படத்திற்கு ரேணிகுண்டா பட நடிகை கொடுத்த போஸ் (இவங்களும் இப்படி எறங்கிட்டாங்களே)

- Advertisement -

இந்த படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஜான் கொக்கன். இவர் தமிழில், ஒஸ்தி, வீரம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இவர் பிரபல vj பூஜாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சார்பட்டா படம் வெளியான பின்னர் இந்த வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிப்பதாக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

அந்த பதிவு மிகவும் வைரலானது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், அஜித் குறித்து பேசுகையில், வீரம் படத்தின் போது அஜித் எனக்கு பல அறிவுரைகளை கூறி இருந்தார். அவர் மிகவும் சிறந்த மனிதர். நான் அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக ட்வீட் போட்ட பின் எனக்கு போன் செய்து, இதே போல போய்கொண்டே இருங்க, நான் எதுவும் பண்ணல எல்லாம் உங்கள் ஹார்ட் ஓர்க் தான் என்று சொன்னார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement