பார்க்க பூனை மாதிரி இருந்தாலும் சிலம்பத்தை புயல் போல சுழற்றும் சினேகன் மனைவி – அசர வைக்கும் வீடியோ.

0
527
kannika
- Advertisement -

சினேகன் மனைவி கன்னிகா சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் சினேகனுக்கு கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.

Bigg Boss fame Snehan's marriage with Kalyana Veedu fame actress Kannika

சினேகன், திருமணம் செய்துள்ள கன்னிகா சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படத்தில் கூட நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சினேகன் ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினேகன் மனைவி கன்னிகா சிலம்பம் சுற்றிய வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement