கர்ப்பமாக இருக்கும் வேலையில் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய சுஜா வருனீ.!

By Rajkumar · 13/7/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவிற்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ஜொள்ளு விட்ட பேராசிரியர்.! ஆதாரத்தை வெளியிட்ட பகல் நிலவு நடிகை.! 

மேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்த சுஜா, திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி குடும்ப பெண்ணாக மாறியுள்ளார். தற்போது சுஜா வருனீ கர்ப்பமாக இருக்கிறார்.

https://twitter.com/sujavarunee/status/1149870337133203457

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது சீமந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் சுஜா. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சுஜா தனது கணவருடன் மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சுஜா.

behindtalkies AMP · Quick view
View full