ஜொள்ளு விட்ட பேராசிரியர்.! ஆதாரத்தை வெளியிட்ட பகல் நிலவு நடிகை.!

0
3739
Soundarya
- Advertisement -

சமீபகாலமாக பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். அதிலும் மீடூ சர்ச்சைக் பின்னர் பல்வேறு பெண்களும், பிரபலங்களும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சமூக வலைதளத்திலேயே வெளிப்படையாக கூறி விடுகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நடிகையான சௌந்தர்யா சமீபத்தில் தனக்கு வந்த தொல்லை ஒன்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவர் பின்னர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மேலும், Shamefully என்ற குறும்படத்தில் நடித்து இருந்தார் சௌந்தர்யா. அந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இரண்டு பாகங்களாக வெளியாகி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : முன்னணி நடிகை தானே.! பின்பு எதற்கு இப்படி ஒரு ஆடையில் போட்டோ ஷூட்.! 

- Advertisement -

சமீபத்தில் சௌந்தர்யாவுக்கு பேராசிரியர் ஒருவர் ஜொள்ளு விடும் வகையில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், நீங்க நிஜமா மொக்க பிகர் தான். ஆனால், உங்க கண்ணும் முக பாவனையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதை நான் மிகவும் விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கடுப்பான சௌந்தர்யா அந்த நபரின் பெயரை மட்டும் மறைத்து விட்டு அவர் அனுப்பிய மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பேராசிரியர் இப்படி தான் பேசுவாரா. அவர் மதுரையில் உள்ள கல்லுரியில் பணிபுரிவதாக தெரிகிறது. அவரிடம் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

-விளம்பரம்-

மேலும், அந்த நபரை நான் அசிங்கபடுத்த விரும்பவில்லை எதனால் நான் அவருடைய பெயரை வெளியிடவில்லை. இருப்பினும் அந்த நபர் குறித்து தகவல்கள் தன்னிடம் உள்ளது. அந்த நபர் யார் என்று கண்டுபிடித்து கல்லூரி நிர்வாகத்தை கண்டிப்பாக கண்டிக்க போவதாகவும், பெண்கள் இது போன்ற ஆட்களிடம் இருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement