நீண்ட வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுரேஷ். அதுவும் இந்த மாஸ்டர் பட நடிகர் படத்தில்.

0
570
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் சோம் சேகர், பாலாஜி முருகதாஸ் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத போட்டியாளர்களும்கலந்து கொண்டனர். அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல்தான் இருந்தது. சுரேஷும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.மேலும், இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார்.

- Advertisement -

அந்த படத்தில் எஸ் பி பியும் நடித்திருந்தார்.அதன் பின்னர் தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் இவர் சொர்ணரேகை என்ற பாலச்சந்தரின் தொடரிலும் நடித்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீண்டும் சினிமா வாய்ப்பை பெற்றுள்ளார்.

அங்காடித்தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கி தேசிய விருதைப் பெற்ற வசந்தபாலன் தற்போது கைதி, மாஸ்டர் பட புகழ் அர்ஜுன் தாஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தை வசந்தபாலனின் தயாரிக்கவும் இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தான் இந்த படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக சுரேஷ் சக்கரவர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement