பிக் பாஸ் Dusky Queen சுருதியா இது ? படு ஓபன் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.

By Rajkumar · 14/10/2021

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். அதில் மாடல் அழகியான சுருதியும் ஒருவர். சேலத்தை சேர்ந்த இவர் மாடலிங் செய்து வருகிறார். இவரது கருப்பான நிறம் காரணமாக இவர் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : ப்படி இருக்கிறது சுந்தர் சியின் மூன்றாம் அரண்மனை - முழு விமர்சனம் இதோ.

கடந்து வந்த பாதை டாஸ்கில் இவர் பேசியது பலரை கண் கலங்க வைத்தது. மேலும், இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்த இவர் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் வாங்கி சிறப்பாக படித்து பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின்னர் வேறு வேலை தேடி சென்னை வந்தார்.

இவர் முதல் முதலில் 'Darkess Divine ' என்ற ஒரு கான்சப்ட்டில் தமிழ் கடவுள் கருப்பாக இருப்பது போல போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அது மிகப்பெரிய வைரலானது. அதன் பின்னர் மிஸ் இந்தியா மிஸ் டிவா போன்ற பேஜென்ட் ஷோவில் இவர் பங்கேற்றுள்ளார். இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full