எப்படி இருக்கிறது சுந்தர் சியின் மூன்றாம் அரண்மனை – முழு விமர்சனம் இதோ.

0
4575
- Advertisement -

இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள பேய் படம் ஹிட்டு கொடுத்தா? இல்லையா/ என்பதை வாங்க பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

தமிழில் நகைச்சுவை பேய் படங்கள் சமீப காலமாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று அடுத்தடுத்து சுந்தர் சி இயக்கி இருந்தார். தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு உள்ளார். வழக்கம் போல தன்னுடைய இரண்டு பாகத்தில் இருந்த கதையை சிறிய மாறுதல்களுடன் வேறு நடிகர்களை வைத்து சுந்தர்சி இயக்கி இருக்கிறார்.

வழக்கம்போல் ஒரு பெண்ணை அநியாயமாக கொல்லப்படுகிறார். பின் அந்த பெண் சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க துரத்துகிறார். கடைசியாக கடவுளின் முன் பூஜை செய்து நிறைய பேர் உடன் எல்லோரையும் காப்பாற்றுகிறார் சுந்தர்.சி. இதுதான் முதல் இரண்டு பாகங்களில் இருந்தது. அதையே இந்த படத்திலும் கொஞ்சம் மாடுலேஷன் செய்து உள்ளார். மேலும், அரண்மனை படத்தின் கடந்த இரண்டு படங்களை விட இந்த முறை பிரம்மாண்ட செட் போட்டு நடிகர்களை மாற்றி காட்சிகளில் கொஞ்சம் மாற்றம் செய்து உள்ளார் இயக்குனர் சுந்தர் சி.

-விளம்பரம்-

படத்தில் பிளாஸ்பேக் கதைகள் மற்ற இரண்டு பாகங்களை விட கொஞ்சம் பரவா இல்லை. படத்தில் விவேக் மற்றும் யோகி பாபுவின் காமெடி வேற லெவல். படத்தில் விவேக், யோகிபாபு காம்பினேஷன் காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று தான் சொல்லலாம். இவர்களுடைய காமெடி தான் படத்திற்கு ஒரு பலமாக உள்ளது. படத்தில் முதல் ஒரு மணி நேரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்தவித காட்சிகளும் இல்லை.

படத்தில் பாத்திரங்களின் அறிமுகம், பேயோட அறிமுகம் பாடல் என்று அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் பேய் களமிறங்கி இருக்கிறது. கதை, திரைக்கதை காட்சியமைப்புகள், காரணம் என எதிலுமே புதுமை இல்லாமல் வழக்கமான அரண்மனை முதலிரண்டு பாகத்தையே கொஞ்சம் மாடுலேஷன் செய்து இருக்கிறார் இயக்குனர். படம் கொஞ்சம் சலிப்பூட்டும் வகையில்தான் நகர்ந்திருக்கிறது. பேய்களிடம் அடி வாங்கும் கதை தான் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

சார்பேட்ட படத்தில் நடித்த ஆர்யா இப்படி ஒரு படத்தில் நடிப்பதா? என்று கூறுமளவிற்கு கதை நகர்ந்துள்ளது. படத்தில் இசை, பாடல்கள், ஒளிப்பதிவு இது மட்டும் தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு கதை உள்ளது. ஏன்டா படத்திற்கு போனோம் என்று சொல்லும் அளவிற்கு படம் உள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

பிளஸ்:

படத்தில் நகைச்சுவையும், விவேக் –யோகி பாபு காம்பினேஷன் நன்றாக உள்ளது.

படத்திற்கு இசையும் ஒளிப்பதிவும் பாடல்களும் தான் பக்கபலமாக இருக்கிறது

நடிகர்கள் தங்களக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார்களே தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

மைனஸ்:

அரைத்த மாவையே திருப்பி திருப்பி அரைத்து இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

அரண்மனை முதல், இரண்டாம் பாகத்தை கொஞ்சம் மாடுலேஷன் செய்து செட்டை பெருசாகி மூன்றாம் பாகத்தை எடுத்து உள்ளார்.

திரையரங்குகளில் ரசிகர்கள் கதறி உள்ளார்கள் என்றே சொல்லணும்.

ஒருமுறை பேய் படம் ஹிட்டானால் அதையே தொடர்ச்சியாக படம் எடுப்பது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. கொஞ்சம் தயவுசெய்து கதையை மாற்றுங்கள் என்று ரசிகர்கள் கதறுகிறார்கள்.

மொத்தத்தில் அரண்மனை 3 படம் ரசிகர்களை விட பேய்கள் தான் பாவம் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.

Advertisement