பிக்பாஸ்ல ஐஸ்வர்யா ஜெயிச்சால்..அது இவரோட சூழ்ச்சியால் தான்..!~

0
688
Aishwarya
- Advertisement -

ஜூன் 17 ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் இரண்டாவது சீசனின் ஃபைனல், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், ரித்விகா, சென்றாயன், மும்தாஜ், மமதி, ஷாரிக், பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், டேனியல், வைஷ்ணவி, நித்யா, பாலாஜி, ரம்யா என 16 போட்டியாளர்களோடு தொடங்கிய இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜயலட்சுமி வீட்டுக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

பல கட்ட எவிக்‌ஷன்களுக்குப் பிறகு தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி என இதுவரை எந்த மொழி பிக் பாஸ் ஃபைனலிலும் இல்லாதவாறு ஃபைனலிஸ்ட் அனைவரும் பெண்களே. இந்த `தேவதைகள் சூழ்’ போட்டியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக வருவதற்குத் தகுதியானவர் யார் என்று விகடன் இணையதளத்தில் சர்வே ஒன்றை நடத்தினோம். அந்த சர்வேயின் முடிவுகள் இதோ…

ராணி மகா ராணி டாஸ்கிற்குப் பிறகு ஐஸ்வர்யா எலிமினேட் ஆவார் என நினைத்தீர்களா..?

-விளம்பரம்-

bigg boss

ஒரே ஒரு டாஸ்க்தான் டோட்டல் இமேஜும் க்ளோஸ்’ என்ற ட்ரெண்டிங் மீம்மிற்கு சமீபத்திய உதாரணம், ஐஸ்வர்யா. ராணி மகா ராணி டாஸ்கிற்குப் பிறகு சக போட்டியாளர்கள் மத்தியிலும் மக்களிடம் தனக்கென இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் கெடுத்துக் கொண்டார். இந்த டாஸ்கிற்குப் பிறகு இவர் எலிமினேட் ஆவார் என 79.8 சதவிகித மக்களும், எலிமினேட் ஆக மாட்டார் என 20.2 சதவிகித மக்களும் நினைத்திருக்கிறார்கள்.

யாஷிகா எலிமினேட் ஆனது..?

bigg boss aishwarya

பிக் பாஸ் முதல் சீசன் 98 நாள்கள்தான் நடந்தது. அதை வைத்துப் பார்த்தால் யாஷிகாவும் ஒரு ஃபைனலிஸ்ட்டே’ என யாஷிகா எலிமினேட் ஆகும் போது கமல் சொன்னார். ஐஸ்வர்யாவின் நட்பு, மஹத்துடன் காதல், போட்டியாளர்களுடன் சின்னச் சின்ன சண்டை எனத் தன் மீது எவ்வளவு நெகட்டிவ் பாயின்டுகள் இருந்தாலும், யாஷிகாவிடம் இருந்த வயதுக்கு மீறிய அந்த மெச்சூரிட்டி லெவல், பல முக்கியமான நேரங்களில் அவரைக் காப்பாற்றியது. இவர் கண்டிப்பாக ஃபைனலுக்குப் போவார்; இவர் கண்டிப்பாக டைட்டில் வின்னராவார் என நினைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு, யாஷிகாவை எலிமினேட் செய்து ஷாக் கொடுத்தார், பிக் பாஸ். யாஷிகா எலிமினேட் ஆனது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று 66.5 சதவிகித மக்களும், ஏற்றுக்கொள்ளலாம் என்று 33.5 சதவிகித மக்களும் கூறியிருக்கிறார்கள்.

ஜனனி, ஐஸ், ரித்து, விஜி… பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்..!?

ஃபைனலுக்குள் முதல் ஆளாக நுழைந்த ஜனனிதான் இந்த சர்வேயில் கடைசி இடத்தில் இருக்கிறார். 5.8 சதவிகித மக்கள் ஜனனிக்கு வாக்களித்துள்ளனர். மூன்றாவது இடத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த விஜயலட்சுமி இருக்கிறார். 9.7 சதவிகித மக்கள் இவருக்கு வாக்களித்துள்ளனர். 18.1 சதவிகித வாக்குகளை வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார், ஐஸ்வர்யா. ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யாவை ஜஸ்ட் லைக் தட் என முந்தி, முதலிடத்தில் இருக்கிறார், ரித்விகா. பிக் பாஸ் டைட்டிலை ரித்விகாதான் வாங்க வேண்டும் என, 66.4 சதவிகித மக்கள் வெறிகொண்டு வாக்களித்துள்ளனர்.

bigg boss 1

வாசகர்களின் சில கமென்டுகள்:

1. இந்தத் திடீர் ஐஸ்வர்யா சப்போர்ட்டர்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. ஐஸ்வர்யா எப்படி வேண்டுமானாலும் பேசலாம், சண்டை போடலாம், ஆர்ப்பாட்டம் பண்ணலாம்; இதைக் குழந்தை மாதிரி, ஒரிஜினலா இருக்கு என்பார்கள். ஆனா ரித்விகா அமைதியா இருந்தா மிக்சர்; நேர்மையா பேசினா நடிப்பு. ஜனனி டிப்ளமேடிக்கா இருந்த விஷ பாட்டில், விஜி எதிர்த்து பேசினா வாயாடி. ரித்விகா டைட்டில் வின் பண்ணினாலும் இல்லைனாலும் எங்க மனசுல ரியல் வின்னர் அவர்தான்.

2. இந்த நால்வரில் ஐஸ் மட்டுமே முதல் நாளில் இருந்து உண்மையாக இருக்கிறார். மொழி தெரியாது, நக்கல் கிண்டல் புரியாது, முகமூடி அணியாது இருந்தவர். கும்பல் நடுவே களைந்து விடாமல் போராடி வந்தவர்.

3. யாஷிகா, ஐஸ்வர்யா இவ்வளவு தூரம் வந்ததற்குக் காரணம் பிக் பாஸ் மட்டும்தான். மற்றும் பல நேரங்களில் யாஷிகா நாமினேஷனிலிருந்து தப்பிக்க மற்றவர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துள்ளார்; பிக்பாஷாலும் காப்பாற்றப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் நாமினேட் ஆனதுபோல் சரியான நேரத்தில் இவர்கள் காப்பாற்றபடாமல் நாமினேஷனுக்கு வந்திருந்தால் என்றோ இவர்கள் காலி. யாஷிகாவுக்குக் குறும்படம் போட்டிருந்தால் தெரிந்திருக்கும். உதாரணம் : பந்து பொறுக்கும் போட்டியில், ஐஸ்வர்யாவை தவறாக வழி நடத்தினார் யாஷிகா. `இனி வரும் டாஸ்க்கில் வெற்றி பெறுவதுதான் முக்கியம்… தலைவர் போட்டி முக்கியமல்ல… ஆகையால் சிரமப்பட்டு விளையாடாதே…’ எனச் சொல்லிவிட்டு அந்த வாரம் அவர் தலைவராகிவிட்டார். எப்படியோ இருவரும் TRP-க்காக பயன்படுத்தப்பட்டார்கள். இதையெல்லாம் தாண்டி யாஷிகா தன் மெச்சூரிட்டியையும் நிரூபித்துள்ளார். அதற்காக வாழ்த்துகள்.

4. ரித்விகா ஐஸ்வர்யாவைக் காப்பாற்றச் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த ரித்விகா எல்லா விஷயத்திலும் தனித்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று நினைத்து இதில் நேர்மையுடன் பேசவில்லை என்பது உண்மையில் வருத்தமாக உள்ளது.

5. பிக் பாஸின் சூழ்ச்சியால் பல நேரங்களில் எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா, அவரோட சூழ்ச்சியால் டைட்டில் ஜெயிச்சாலும் ஆச்சர்யம் இல்லை.

Advertisement