‘கொரியோகிராபர்னா டான்ஸ் ஆடலாம் டா ஆணவத்தில் ஆடாதீங்க’ கேலி செய்த நடன இயக்குனருக்கு அனிதா சம்பத்தின் கணவர் மறைமுக பதிலடி.

0
51902
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் நடிகையுமான அனிதா சம்பத்தும் ஒருவர். சமூக வளைதளத்தில் இவருக்கு நிறைய ஆதரவு இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ற ஓரிரு நாட்களிலேயே இவர் ரசிகர்களால் கொஞ்சம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனிதா சம்பத் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கின் போது சொன்ன கதையை நடன இயக்குனரான சதீஷ் கலாய்த்திருக்கிறார்.

-விளம்பரம்-

நடன இயக்குனரான சதீஷ், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர். இதனால் போட்டியாளர்களை பற்றி அடிக்கடி ஏதாவது ட்வீட் செய்வது வழக்கம். அந்த வகையில் இவர் சமீபத்தில் அனிதா சம்பத் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், அனிதா சம்பத் ஒட்டுமொத்த மூணு சீனையும் தனது ரத்தத்தில் புகுத்திக் கொண்டு இருக்கிறார். வெளியே சென்றாலும் சீக்ரெட் ரூமுக்கு போறேன்னு சொல்வாங்க போல. அனிதா கதைய சொல்லுமா, அனிதா கண்டிப்பாக சனம் ஷெட்டியை எவிக்ஷநிலிருந்து காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அனிதா தயவு செஞ்சு கொஞ்சம் மெதுவா பேசுங்க. மறுபடியும் பார்த்தால்தான் புரியும் போல. எனக்கு சோகம் வரவே இல்லை ஏன்னு புரியல.ஆமாமா அனிதா கதை ஓவர் தான். அவங்க சொன்ன கதை சோகமாகவும் இல்லை உணர்ச்சி பூர்வமாகவும் இல்லை. இப்படியே விடாமல் பேசினா எல்லாரும் ஓடிட்டுவாங்க ஓடிக்கிட்டு இருங்க. இந்த கொரோனா நிறைய பேருக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால கொஞ்சம் அமைதியா இருங்க என்றெல்லாம் அனிதா சம்பத்தை கலாய்த்து இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா, கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசி தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவித்த பசியையும் வலியையும் கூட கிண்டல் பண்ண தோணும். பின்குறிப்பு : கொரியோகிராபர்னா டான்ஸ் ஆடலாம் டா ஆணவத்தில் ஆடாதீங்க’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்க்கும் போது இது சதீஷுக்கு கொடுத்த பதிலடி போல தான் தோன்றுகிறது.

-விளம்பரம்-
Advertisement