நேத்து அனிதா சம்பத், இவங்களுக்கு தான் ஹார்ட் கொடுத்திருக்காங்க – வீடியோ இதோ.

0
2161
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் பெரும்பாலும் ரசிகர்களுக்கு அறியப்பட்ட பிரபலங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதே போல ரியோ, நிஷா, கேபி, ரம்யா பாண்டியன், ரேகா என்று விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிட்சையான ஆட்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல இந்த சீசனில் கொஞ்சம் இளசுகளுக்கு அதிகம். முதல் நாளில் சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. அதே போல இந்த வாரம் எலிமினேசனும் இல்லை.அதே போல இந்த வார தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் பிராஸஸுக்கான ஒத்திகை என்று ஒரு டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொளுத்தி போட்டுள்ளார் பிக் பாஸ். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும் மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார்.

இதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி. இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட்டில் இருந்து வருகிறார். இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கூட ஆரி, சோம், பாலாஜி ஆகியோர் ஷிவானிக்கு ஆறுதல் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் அனிதா சம்பத், நிஷாவிற்கு ஹார்ட் கொடுத்து, நிஷா தனது அம்மா போல இருக்கிறார் என்று கூறி அழுதுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement