60 நாள் குழந்தைக்கு ஏற்பட்ட விபத்து – நிஷா மகள் எப்படி இருக்கார் ? – வீடியோ இதோ.

0
1251
nisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அறந்தாங்கி நிஷா ஒருவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நிஷா அதன் பின்னர் ஒருசில படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தனது மகள் குறித்து நிஷா சொன்ன சம்பவம் பலரின் மனதையும் உருக்கியது. நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். இதில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை பற்றி கூறுமாறு குறிப்பிட்டு இருந்தார் பிக் பாஸ். நேற்றைய நிகழ்ச்சியில் வேல்முருகன், சனம் ஷெட்டி, நிஷா என்று மூவர் மட்டும் தங்களது வாழ்வில் நடந்த அனுபவங்களை கூறி இருந்தனர். ஆனால், நிஷா சொன்ன அனுபவங்கள் தான் பலரையும் கண்கலங்க வைத்ததோடு நிஷாவின் தன்னமிக்கையையும் உணர்த்தியது.

- Advertisement -

தனது அனுபவங்கள் குறித்து பேசிய நிஷா, இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது நிஷா தனது மகளுக்கு நேர்ந்த  ஒரு விபத்து குறித்து பேசி இருந்தார் அதில் தனது மகளுக்கு 60 வது நாள்இருந்த போது ஒரு கார் விபத்தில் தன் குழந்தைக்குகாதலில் அடிபட்டு காது அறுந்து விட்டது. இது என்னுடன் பணியாற்றும் அவர்களுக்கு கூட தெரியாது என்று சொன்னபோது சத்தியமாக எங்களுக்குத் தெரியாது என்று கண்ணீர் வடித்தார் ரியோ. மேலும், தனது மகள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் அவருக்கு காதில் தையல் போடப்பட்டது என்று கூறியிருந்தார். தனது மகளை தனது அம்மா தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். தற்போது தனது மகள் நன்றாக இருக்கிறார் என்று கோரியிருந்தார்.

அறந்தாங்கி நிஷாவிற்கு ஏற்கனவே மகன் ஒருவர் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர் கூட தனது மகள் குறித்து உருக்கமான சில பதிவுகளை கூட பதிவிட்டு சென்று இருந்தார் நிஷா. இதோ அவரது அழகிய மகளின் வீடியோ.

-விளம்பரம்-
Advertisement