இயற்கை விதை, டென்ட், pen – இறுதி போட்டியாளர்களுக்கும் கமல் கொடுத்த பரிசுகள்.

0
1074
BB
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இறுதி போட்டி 6 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.

- Advertisement -

இந்த சீசனின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதே போல இன்று 6 மணி நேரம் பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ஆரி தான் டைட்டிலை வெல்வார் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். அதே போல ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு இருந்த வாக்கு வித்யாசம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்ததாம். அதிலும் ஆரிக்கு 23 கோடி வாக்குகள் வந்திருக்கிறது.

பொதுவாக இறுதி போட்டியின் போது கமல், இறுதி போட்டியாளர் அனைவர்களுக்கும் பரிசுகளை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் இறுதி போட்டிக்கு வந்துள்ள ஆரி, பாலாஜி, சோம் சேகர், ரியோ, ரம்யா ஆகிய ஐவருக்கும் கமல் பரிசு கொடுத்துள்ளார். அதில் ஆரிக்கு Pen மற்றும் டைரியையும், பாலாஜிக்கு Dumbbells சையும், ரியோவிற்கு டென்ட்டையும், சோம் சேகருக்கு drum ஐயும், ரம்யாவிற்கு இயற்கை விதைகளையும் அளித்துள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement