இந்த மேடம் இருந்தா நான் இருக்க மாட்டேன் – கோபித்த சுரேஷ், கதறி அழும் அனிதா.

0
859
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வெற்றிகரமாக நான்கு நாட்கள் நிறைவடைந்து இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இதுவரை போட்டியாளர்கள் மூன்று நாட்கள் கழித்து உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் ஏற்படவில்லை. இடையில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை சுரேஷ் சக்கரவர்த்தி விட்டாலும் அனிதா சம்பத் விடாமல் அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இந்த வாரம் பிக்பாஸ் ஸ்டால் ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த உரிமையும் கிடையாது. இருப்பினும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த ராஸ்கல் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை கூறவேண்டும் அப்படி கூறும் சிறந்த 8 போட்டியாளர்கள் அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார்கள். மீதமுள்ள 8 பேர் நேரடியாக அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருப்பார்கள். இதில் ஏற்கனவே ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த வாரம் நாமினேசனில் தேர்வாகியுள்ள மீதமுள்ள நான்கு பேர் யார் என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும் இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வெளியாகி வரும் ப்ரொமோவில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவதியின் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் மீண்டும் அனிதா மற்றும் சுரேஷுக்கு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement