எனக்கு ஒரு நாளைக்கு 2 முட்டை வேணும் ரம்யா – இவங்க என்ன லேடி கணேஷ் வெங்கட் ரமணா ? Unseen வீடியோ இதோ.

0
5037
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதுவரை போட்டியாளர்கள் 3 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் கழித்துள்ளனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக போட்டியாளர்களை பற்றிய உண்மை குணம் அவ்வப்போது எட்டிபார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை இருப்பினும் அடுத்த வாரத்திற்கான எலிமினேஷன் பிராசஸ் தற்போது துவங்கி விட்டது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் டிவியில் வராத காட்சிகளை ஹாட் ஸ்டாரில் Unseen வீடியோ என்ற பெயரில் ஒளிபரப்பினார். தற்போது இந்த ஆண்டு விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சேனல் கடந்த 4 ஆம் தேதி தான் துவங்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒளிபரப்பாகியுள்ள unseen வீடியோ ஒன்றில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா பாண்டியனிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அனைவரும் பிக் பாஸ் வீட்டை எப்படி பராமரிப்பது எப்படி சமாளிப்பது என்றெல்லாம் விவாதித்து கொண்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகை ரேகா, ரம்யாவிடம் எனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முட்டை வேண்டும் என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் போது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கனேஷ் வெங்கட் ராமன் தான் நினைவிற்கு வருகிறது. அவர் தான் முட்டைக்காக பலகேலிகளுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement