இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன் – யார் யாரை நாமினேட் செய்தார்கள் – நம்பவே முடியல.

0
497
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்று இருந்தது இதில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இருந்த பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் வாரத்தில் வயதானவர்களும் அல்லது பெண்கள்தான் வெளியேறுவார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது அது இந்த சீசனுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

-விளம்பரம்-

கடந்த வாரம் பல்வேறு இணைய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகா விற்கு தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பதிவாகி இருந்தன ஆனால் ரேகாவை விட சனம் ஷெட்டி கொஞ்சம் வாக்குகளை பெற்று இருந்ததால் இந்த வாரம் தப்பித்துவிட்டார் அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் அதில் வீட்டில் யார் முகமூடி அணிந்து இருக்கிறார்கள் என்றும் யார் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்றும் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார்.

- Advertisement -

இதில் ரியோ மற்றும் ஆரிக்கு 5 முகமூடிகள் கிடைத்திருந்தது. இதனால் இருவருமே கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். அதிலும் நிறைய தனக்கு இந்த முகமூடிகளை கொடுத்தது நியாயமே இல்லை என்று கமலிடம் புலம்பித் தள்ளி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோவும் கடந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர்களையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

யார்? யாரை நாமினேட் செய்த்தனர்,

-விளம்பரம்-

அர்ச்சனா – ஆரி அஜத்

ஆஜீத் – ஆரி அனிதா

சுரேஷ் – ஆரி ஜித்தன்

சம்யுக்தா – அனிதா , ஆரி

ரம்யா பாண்டியன் – சுரேஷ், ஆரி

நிஷா – சுரேஷ், ஆஜீத்

கேப்ரில்லா -அனிதா, ஆரி

ஆரி – சுரேஷ், ஆஜீத்

சோம் சேகர் – சுரேஷ், ஆரி

வேல் முருகன் – பாலாஜி, சுரேஷ்

ஜித்தன் ரமேஷ் – சுரேஷ், ஆஜீத்

ஷிவானி – ஆரி, அனிதா

அனிதா – சுரேஷ், ஆஜீத்

பாலாஜி முருகதாஸ் – நிஷா, ஆரி

சனம் ஷெட்டி – பாலா, சுரேஷ்

ரியோ ராஜ் – சுரேஷ், ரம்யா

இந்த நாமினேஷன் அடிப்படியில் இந்த வாரம் சுரேஷ், ஆரி, ஆஜீத் அனிதா, பாலாஜி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ஆஜீத்திடன் Eviction Free Pass இருக்கிறது என்பது குறிப்பிடத்க்கது.

Advertisement