இந்த சீசனில் ஸ்மோக்கிங் ரூம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ? இது தான் அது.

0
3505
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அத்திவாரத்தை கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக சென்றுகொண்டிருந்த இந்த நிகழ்ச்சி நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த பிக்பாஸ் வீட்டிற்க்கும் இந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த பிக்பாஸ் வீடிற்க்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். ஆனால் இந்த சீசனில் புகைபிடிக்கும் அரை இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ?

-விளம்பரம்-

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகைப்பிடிக்கும் அறை வெட்டவெளிச்சமாக காட்டப்பட்டது. போட்டியாளர்கள் புகை பிடிப்பதை காட்டவில்லை என்றாலும் அந்த புகை பிடிக்கும் அறைக்குள் எக்கச்சக்க சிகரெட் டப்பாக்கள் இருந்ததை நாமே பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த முறை புகைப்பிடிக்கும் அரை இருக்கிறதா இல்லையா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. ஒரு சிலர் இந்த சீசனில் புகைபிடிக்கும் அருகே இல்லை என்று நினைத்து வந்த நிலையில் இந்த சீசனிலும் புகை பிடிக்கும் அறையை யார் கண்ணிலும் எளிதாக தெரியாத வண்ணம் பிக்பாஸ் கேமராக்கள் மறைத்துக் கொண்டு வருகிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்து இருக்கிறது.

- Advertisement -

ஆம், இந்த சீசனிலும் போட்டியாளர்கள் தங்களுடைய டென்ஷனை குறைக்க புகைபிடிக்கும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நீச்சல் குளம் இருக்கும் மிக அருகில் ஒரு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறை இருப்பது பலருக்கும் தெரியாது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் நடந்த நீதிமன்ற டாஸ்கின் போது சுரேஷ் மற்றும் கேபி விஷயத்தில் சுரேஷ் கொஞ்சம் கடுப்பாகி வெளியில் வரும்போது நேராக இந்த அறைக்கு தான் செல்வார். அதேபோல கடந்த தினங்களுக்கு முன்னர் இதே அறைக்குள் பாலாஜி மற்றும் சித்ராவும் சென்றுள்ளனர்.

கடந்த சீசனில் கார்டன் ஏரியாவில் நடுவில் இந்த புகை பிடிக்கும் அதை வெட்ட வெளிச்சமாக அமைக்கப்பட்டு இருந்தது ஆனால், இந்த முறை பார்வையாளர்களின் கண்களுக்கு எளிதாக பட முடியாத வண்ணம் இந்த புகைப்பிடிக்கும் அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த அறைக்குள் போட்டியாளர்கள் செல்வதை அடிக்கடி பிக்பாஸ் காண்பிப்பதும் கிடையாது. அதே போல இந்த அறைக்குள் சுரேஷ், சுசித்ரா, பாலாவை தவிர வேறு யாராவது சென்று வருகிறார்களா என்பதை இனிமேல் வரும் நிகழ்ச்சிகளில் தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement