கூகுள் விக்கிபீடியாவில் அப்டேட் செய்யப்பட்ட பிக் பாஸ் துவங்கும் தேதி – எப்போது தெரியுமா ?

0
830
biggboss
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-
biggboss

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது . தற்போது தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

ஆனால், தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் இரண்டாவது புரமோ வீடியோ வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கூகுளின் விக்கிபீடியா பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதி அக்டோபர் 11 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஞாயிற்று கிழமையில் தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அக்டோபர் 4 அல்லது 11 ல் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement