பிக் பாஸ் வீட்டில் நடந்த பேஷன் ஷோ. ரியோ- நிஷா செய்த செம சேட்டை. Unseen வீடியோ இதோ.

0
17397
ramp
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அதிலும் அறந்தாங்கி நிஷா கேப்ரில்லா ஆட்சித் ரம்யா பாண்டியன் என்று எண்ணற்ற விஜய் டிவி பிரபலங்களும் இம்முறை கலந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பான காட்சிகள் ஹாட்ஸ்டார் இல் Unseen வீடியோ என்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை ஹாட்ஸ்டாரில் அவ்வளவாக Unseen வீடியோக்கள் வெளியாகவில்லை அதற்கு மாறாக விஜய் தொலைக்காட்சி சமீபத்தில துவங்கிய விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் Unseen வீடியோக்களை மியூசிக் சேனலில் மட்டுமே வருகிறது . பெரும்பாலும் டிவியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை விட இந்த Unseen வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் சில ஆட்சியின் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி போல போட்டியாளர்களில் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதிலும் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷாவின் ராம்ப் வாக் அனைவரையும் சிரிக்க வைத்தது. இருவரும் நடந்து முடித்த பின்னர்ரியோவை நிஷா முத்தமிட்டு இருந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

இது ஒருபுறம் இருக்க முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது. இருப்பினும் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது. சமீபத்தில் பிக் பாஸில் போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் யாருடைய கதை சுவாரஸ்யமாக இல்லையோ அவர்கள் நேரடியாக அடுத்த வாரம் நாமினேசனில் இடம்பெற்ற இருக்கிறார்கள். அந்த வகையில் ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா,அஜீத், ஷிவானி, சுரேஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

-விளம்பரம்-

Advertisement