பிக் பாஸ் வீட்டில் உருவாகிறதா புதிய காதல் ஜோடி? நேத்து இவங்க ரெண்டு பேர நோட் பன்னீங்களா.

0
617
Bigg Boss
- Advertisement -

விஜய் தொலைக்கதியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஒரு மாதத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பொதுவாக பிக்பாஸ் என்றாலே ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஏதாவது ஒரு காதல் கதை சென்றுவிடும் ஆனால் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் திருமணமானவர்கள் தான் இதில் திருமணமாகாதவர்கள் என்று பார்த்தால் அக்ஷரா, மதுமிதா, வருண், ஐக்கி, சுருதி, நிரூப் ஆகிய இவர்கள் மட்டும் தான்.

-விளம்பரம்-

எனவே, இவர்களுக்குகள் யாருக்கு லவ் டிராக் செல்லும் என்று எதிர்பார்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது அக்ஷரா மற்றும் வருண் ஆகிய இருவருக்கும் ஏதோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருப்பது போல தான் தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடத்த டாஸ்க் ஒன்றில் ‘நீ கஷ்டப்படும் நேரத்தில் உன்னுடன் யார் இருப்பாங்க ‘ என்று அக்ஷராவிடம் கேட்கப்பட்ட போது கூட அக்ஷரா, வருண் தான் எனக்கு எப்போதும் ஆறுதலாக பேசுவார் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : விஜய்யின் யூத் படத்தில் நடித்துள்ள மிஸ்கின் மற்றும் சதுரங்க வேட்டை நட்டி – இதோ அந்த காட்சிகள்.

- Advertisement -

அதே போல நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா ஸ்கர்ட் ஒன்றை போட்டிருந்தார். அதை பார்த்த வருண் இந்த ட்ரஸ் நல்லாவே இல்லை போய் வேற டிரேஸ் மாத்து என்று சொன்னதும் ‘இது நல்லா தான இருக்கு’ என்று அக்ஷரா கூறினார். அதற்கு வருண் ‘நல்லா தான் இருக்கு எனக்கு புடிக்கல’ என்று சொன்னதும் அக்ஷரா பெட் ரூமிற்கு போய் வேறு உடையை எடுத்து மாத்திக்கொண்டார்.

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ராம்ப் வால்க் செய்து போது அக்ஷரா நடந்து வந்த போது வருனையும், வருண் நடந்து வந்த போது அக்ஷராவை தான் கேமராவும் போக்கஸ் ஆனது. இதை பார்க்கும் போது பிக் பாஸ் டீமும் இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரியை கிளப்பிவிட்டு விடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement