விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியேறி இன்னும் 12 பேர் உள்ளே இருக்கின்றனர்.

யார் இந்த அமீர் :

இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அமீர் மிகவும் புதிதானவர் தான். நடன இயக்குனரான இவர் ஊட்டியில் Ads என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

Advertisement

தாய் தந்தை இழப்பு :

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற BB ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்தியா மற்றும் பாத்திமா பாபுவின் நடன இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவரை பற்றி அறியாத பல விஷயங்களை பிரபல பிக் பாஸ் விமர்சகரும் லீக் மன்னனுமான இமாத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டாராம்.

அனாதை ஆசிரமத்தில் வாழ்க்கை :

பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டு இருக்கிறாராம். ஒரு அனாதை ஆசிரமத்தில் தான் அமீர் வளர்ந்து இருக்கிறார். மழை வந்தால் ஒழுக கூடிய ஒரு சிறிய குடிசையில் கழிவறை வசதி கூட இல்லாத ஒரு வீட்டில் தான் அமீர் வசித்து வந்து இருக்கிறார்.

Advertisement

இந்திய ராணுவ கனவு :

தன்னுடைய 16 வயதில் தன் அம்மா கொலை செய்யப்பட்ட நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சுடுகாட்டிற்கு அலைந்து இருக்கிறார் அமீர். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது. இவருக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே லட்சியம்.

Advertisement

நடன பள்ளி :

இதனால் ஊட்டியில் ராணுவத்தில் சேரக்கூடிய படிப்பை படித்து இருக்கிறார். மேலும், இவரது கையில் 4 இன்ச் அளவில் ஒரு தேசிய கொடியின் டாட்டூ கூட இருக்கும். நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பிரபுதேவாவின் மிகப்பெரிய ரசிகர். மேலும், கஷ்டப்பட்டு ஒரு நடன பள்ளியை தன் சொந்த ஊரிலேயே துவங்கி இருக்கிறார்.

இதுவரை பார்த்த வெற்றிகள் :

மேலும், இவர் பல்வேரு நடன போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். குறிப்பாக கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் முதல் இடத்தையும், சீசன் 2வில் இரண்டாம் இடத்தையும் பிடித்து இருக்கிறார். அதே போல அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஹிப் ஹாப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு அந்த போட்டியில் 34வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்.

Advertisement