அட, கலைஞர் டிவியில் வந்த இவர் தான் பிக் பாஸ் வருணின் அம்மாவா – யார் பாருங்களேன்.

0
777
varun
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் 73 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். அதே போல இந்த சீசனில் கலந்து கொண்ட ஒரு சில நபர்கள் ஏற்கனவே சினிமாவில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் வருணும் ஒருவர். இவர் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இவருக்கு மாமா முறை வேண்டும்.

- Advertisement -

கிட்டதட்ட வருணும் ஒரு வாரிசு நடிகர் தான் ஆனால், இதுவரை இவருக்கு சினிமாவில் ஒரு ஆழமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவர் விஜய் நடித்த தலைவா படத்தில் விஜய்யின் நண்பராக நடித்து இருந்தார். ஜீவா நடிப்பில் வெளியான ‘சீறு’ படத்தில் மல்லி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதே போல தமிழில் இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இறுதியாக இவர் பப்பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். வருணின் தாயார் ஒரு பியூட்டிஷியனாம். அவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவையர் பூங்கா’ என்ற ல் அழகு குறிப்புகள் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குபெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதே போல பலரும் வருணுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தான் நினைத்து வருகின்றனர். ஆனால், வருண் சிங்கிள் தான்.

-விளம்பரம்-
Advertisement