வெள்ளிக்கிழமையே கசிந்த எலிமினேஷன் விவரம் – என்னது, இந்த வாரம் வெளியேற போவது இவரா ?

0
517
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்காக நாமினேஷன் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 82 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நதியா சங் வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

அவரை தொடர்ந்து அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி , அண்ணாச்சி, அபிநய் என்று அடுத்தடுத்து 10 பேர் வெளியேறினார்கள். இப்படி இருக்க இன்னும் 10 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தாமரை தலைவராக இருந்ததால் அவர் தப்பித்துவிட்டார்.

- Advertisement -

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் :

அதே போல இந்த வாரம் நடைபெற்ற நாமிநேஷனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் பிரியங்கா, அக்ஷரா, சிபி, நிரூப், வருண், பாவனி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் கண்டிப்பாக பிரியங்கா காப்பாற்றப்பட்டுவிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்த வாரம் வெளியேறுவது இவரா ? :

ஆனால், மீதம் இருந்த 5 பேரில் யார் வெளியேறுவார் என்பதை கணிக்க முடியாத அளவு இருந்து வருகிறது. பொதுவாக எலிமிநேஷன் பற்றிய தகவல்கள் சனிக்கிழமை தான் கசிய துவங்கும். ஆனால், இந்த வாரம் வெள்ளிக்கிழமையே எலிமினேஷன் பற்றிய தகவல் கசிந்துவிட்டது. அதுவும் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து சிபி வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசியத்துவங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

எதிர்பாராத வெளியேற்றம் :

இருப்பினும் நாளையே எலிமிநேஷன் முடிவுகள் உறுதிப்படுத்தப்படும் என்றும் தகவல் கசிந்து இருக்கிறது. அதே போல இந்த வாரம் அக்ஷரா வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒருவேளை சிபி வெளியேற்றம் உண்மை என்ற பட்சத்தில் இந்த வெளியேற்றத்தை நிச்சயம் ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

BehindTalkies Followers கருத்து :

அதற்கு முக்கிய காரணமே இந்த வாரம் முழுதும் பல்வேரு தனியார் வலைதளத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் கடைசி இடத்தில் வருண் மற்றும் நிரூப் தான் மாறி மாறி இடம்பெற்று வந்தனர். அதே போல நம் Behindtalkies இன்ஸ்டா பக்கத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் கூட சிபியின் பெயர் அவ்வளவாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement