கெட் டு கேதர் போட்ட வெளியேறிய 5 பெண் போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ. யார் யார் பாருங்க.

0
975
namitha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை 52 நாட்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா, நதியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா இசைவாணி, ஐக்கி என்று 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் ஏற்கனவே வெளியேறிய அபிஷேக்கை மீண்டும் வைல்டு கார்டு மூலம் கொண்டு வந்துள்ளனர்.

-விளம்பரம்-

அவரை தொடர்ந்து அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற சீசனில் அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்ட சீஸனும் இதான். அதே போல அதிக பெண் போட்டியாளர்கள் கலந்துகொண்ட சீஸனும் இதான். இந்த சீசனின் முதல் நாளிலேயே 18 போட்டியாளரும் கலந்துகொண்டனர்.

- Advertisement -

இதில் 18 பேரில் 10 பேர் பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை நமீதா மாரிமுத்து. இந்த சீசனில் அதிகம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சீசனில் இதுவரை வெளியேறிய 8 போட்டியாளர்களில் 6 போட்டியாளரால் பெண்கள் தான் என்பது குறிப்பிடதக்கது.

அதிலும் நமீதா மாரிமுத்துவின் வெளியேற்றம் இன்னமும் படு ரகசியமாகமே இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய நமீதா, நாதியா, மதுமிதா, சுருதி, இசைவாணி என்று பலரும் வீடியோகாலில் ஒரு கெட் டு கெதரை போட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பிறவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement