வைரலான குறும்படம் பிரியங்காவை வச்சி செய்யும் கமல் – இப்போ சந்தோசமா உங்களுக்கு எல்லாம்.

0
24121
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 3 வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. முதல் வாரத்தில் எந்த ஒரு நாமினேஷனும் இல்லாத நிலையில் கடந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தாமரைச்செல்வி மற்றும் பாவணி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நாடியா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் இரண்டாம் நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வெடித்தது. அதிலும் குறிப்பாக பிரியங்காவின் செயல்படுங்கள் பலரை எரிச்சலடைய வைத்தது. ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா, அக்ஷ்ராவை கார்னர் செய்கிறார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்கும் மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுஇருந்தது. அது என்னன்னா, பிரியங்கா நான் சத்தமாக பேசுறதினால் நீ நல்ல பொண்ணு என்று வெளியில் பார்க்கிற மக்களுக்கு வேற மாதிரி தெரியும்.

- Advertisement -

நீ எது பேசுனாலும் நேரடியாக பேசு. ஏன் காகிதத்தில் எழுதி அதை ரகசியமாக வைத்து பாத் ரூமில் போடுற. நீ என்ன எழுதற என்று எங்களுக்கோ, பிக் பாஸ்க்கோ, மக்களுக்கோ தெரியாது.ஆனால், நீ பண்ணறதை பார்த்தால் நாங்கள் ஏதோ உன்னை டார்கெட் பண்ணுற மாதிரி வெளியில் தெரியும். எது ரொம்ப தப்பு, அசிங்கமாக இருக்கு என்று பிரியங்கா கூறினார். உடனே அக்ஷராவுக்கும் ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதே பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிரூப்பிடம் அக்ஷரா பற்றி கிசு கிசுத்தப்போது அவரின் நிரூப் கையை பிடித்து ஏதோ தனது விரலால் எழுதி காட்டினார்.

அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதுக்கு முன்னாடி நீ சரியா இரு என்று பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். எப்ப பாரு பிரியங்கா அக்ஷராவை கார்னர் பண்றாங்க என்று அக்ஷரா ரசிகர் கூட்டம் கொந்தளித்து போய் இந்த விஷயத்தை கமல் கேட்க வேண்டும் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவாகரத்தில் கமல், பிரியங்காவை வச்சி செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்போ தான் எங்க மனசுல இருக்க பாரமே கொறஞ்ச மாதிரி இருக்கு என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement