இருட்டுக்குள் வாழும் குழி எலி தான் ராஜு – பாய்ண்ட் பாய்ண்டாக வெளுத்து வாங்கிய ஜேம்ஸ் வசந்தன். வைரலாகும் வீடியோ.

0
670
raju
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. வழக்கம்போல் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பும், சச்சரவும் தொடங்கியது. அதிலும் கடந்த சில நாட்களாக டாஸ்க் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து போட்டியாளர்களுக்குள் வன்மமும் தொடங்கி விட்டது.அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து ராஜீவுக்கும், பவானிக்கும் இடையே சின்ன சின்ன மோதல்கள் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

பின் நாளடைவில் பவானி நேரடியாக ராஜீவ் இடம் சண்டை போட்டார். ஆனால், ராஜூ அவர்கள் நைசாக, பட்டும்படாமலும் பவானியிடம் பேசாமல் பிற போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து ஜேம்ஸ் அவர்கள் டுவிட்டரில் வீடியோ ஒன்று பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரே ஒரு காரணத்திற்காக பவானியை இன்னும் கட்டம் கட்டி வெறுப்பாகி சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை பற்றி குறை சொல்லி வருகிறார் ராஜு.

- Advertisement -

பவானிக்கு சாப்பாடு வேண்டாம் என்று சொல்கிறார். உடனே நீருப் வந்து ஒருவருக்காக எல்லாம் செய்ய முடியாது என்று சொல்கிறார். அப்படி நிரூப் சொல்கிறார் என்றால் அவர் கிச்சனில் அதிகமாக வேலை செய்கிறார். அதனால் அவருக்கு சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இதுதான் சமயம் என்று பவானி, பிரியங்காவிடம் சொல்லி ஒரு சப்பாத்தி செய்து கொள்வால் என்று நக்கலாக ராஜு பேசுகிறார். வீட்டுக்குள் எல்லோரும் தங்களுக்கு வேண்டியதை மற்றவர்களிடம் சொல்லி வேண்டியதை செய்து சாப்பிடுகிறார்கள். ராஜுவும் சமைத்துத் தர சொல்லி கேட்டு சாப்பிட்டு இருக்கிறார். ஆனால், பவானி கேட்டால் மட்டும் தப்பா? இது உங்களால் பொறுக்க முடியவில்லையா? சமையல் டீமில் இருக்கும் போது ராஜு மற்றும் பிற போட்டியாளர்கள் உதவி பண்ண வில்லை என்று பவானி சொல்லியதார்.

இதற்கு 6 வாரங்களாக அவரை வெறுத்து தனிப்பட்ட வெறுப்பை காட்டு கொண்டு வருகிறார் ராஜு. அதே போல் மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரிக்க சொல்லி இருந்தபோது நீங்கள் யாராவது சரியாக செய்திர்களா? என்று பிரியங்கா நியாயமாக கேட்டார். ஆனால், அதற்கு ராஜுவிடம் இருந்து பதிலே வரவில்லை. என்ன சொன்னாலும் சுத்தி கேமரா இருப்பதால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று பயந்து பயந்து ராஜு விளையாடுகிறார். கேமராவிற்கு பயந்து பயந்து நடுங்கி ராஜு இருட்டுக்குள்ளே வாழும் குழி எலி போல் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்.

-விளம்பரம்-

எல்லோரிடமும் பேசும் போது ராஜு கவனமாக தன்னுடைய இமேஜ் வேற மாறி வெளியே தெரியும் என்று நினைத்து எதுவும் பேசாமல் பிரச்சனையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு நடிக்கிறார் என்று ஜேம்ஸ் ராஜீவை பற்றி பேசிருக்கிறார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கருத்துகளை போட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே ராஜு பிக் பாஸ் வீட்டில் சேப் கேம் தான் விளையாடுகிறாரா? இது அவருடைய உண்மையான முகமா? இல்லையோ? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.

Advertisement