ப்பா , ராஜுவா இது ? எப்படி இருந்துள்ளார் பாருங்க - அவர் நடித்துள்ள Short Film இதோ.

By Rajkumar · 13/11/2021

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதமே கோலாகலமாக தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் சீசன் சீசனில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீசனில் முகம் தெரிந்த நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு பரிச்சயமான நபர்களில் ஒருவராக ராஜு திகழ்கிறார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1459458741531672577

அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல சீரியலில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : தண்ணீரில் மிதக்கும் ‘பீஸ்ட்’ ஷாப்பிங் மால் செட் - வைரலாகும் புகைப்படம். பல கோடிகள் லாஸ்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அசத்தி கொண்டு வருகிறார். இந்நிலையில் ராஜு அவர்களின் பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ராஜூ அவர்கள் கல்லூரி படிக்கும் காலத்தில் தானே குறும்படம் ஒன்றை இயக்கி நடித்திருக்கிறார். தற்போது அந்த குறும்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பலரும் ரசித்தும், பாராட்டியும், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=u0aeCL_xNQ4

பொதுவாகவே ராஜு ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த எண்டர்டெயினர் என்றும் சொல்லலாம். அவர் இருக்கும் இடத்தை எப்போதுமே சந்தோஷமாக வைத்திருப்பார். அதே போல் பிக் பாஸ் வீட்டிலும் அவர் அதையே தான் செய்து கொண்டிருக்கிறார். இனிவரும் காலங்களில் அவருடைய குணாதிசயங்கள் மாறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full