தண்ணீரில் மிதக்கும் ‘பீஸ்ட்’ ஷாப்பிங் மால் செட் – வைரலாகும் புகைப்படம். பல கோடிகள் லாஸ்.

0
633
- Advertisement -

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பீஸ்ட் படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட் தற்போது தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிற காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், படத்தின் சில காட்சிகள் ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட இருந்ததால் சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் போல் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே சென்னையில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல இடங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்து இருப்பதால் மக்கள் தங்க இடமில்லாமல், உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : சின்னத்திரையின் அடுத்த காதல் திருமணம் ரெடி – திருமண தேதியை அறிவித்த மதன் ரேஷ்மா ஜோடி. என்று தெரியுமா ?

- Advertisement -

இதனால் பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்காக சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் அந்த ஷாப்பிங் மால் அரங்கை சுற்றி மழைநீர் தேங்கி இருக்கிறது. மேலும், அடித்த மழையில் அரங்குக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மழையின் காரணமாக பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதோடு இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பிரச்சனை எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஜார்ஜியாவில் ஒரு முக்கியமான காட்சி எடுக்க இருப்பதால் மீண்டும் பீஸ்ட் படக்குழுவினர் ஜார்ஜியா செல்ல இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement