அந்த நடிகையை தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டேன் (இத உங்க wife பாத்தா என்ன ஆகும் ராஜு பாய் )

0
2507
raju
- Advertisement -

ஒட்டுமொத்த மக்களும் பல மாதங்களாக ஆவலுடன் எதிர் நோக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் நாளன்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. வழக்கம்போல் வீடு ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கி இனிதே முடிவடைந்தது. அதிலும் குறிப்பாக ராஜு ஜெயமோகன் மற்ற போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார் என்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

-விளம்பரம்-

முதல் நாளன்று ராஜீ அவர்களின் காமெடி ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் ராஜி பற்றி பலரும் தெரியாத சில விஷயங்களை இங்கு பார்க்கலாம். அதே போல ராஜுவின் கேம் பலேக்களை கூட கமலே பாராட்டி இருந்தார். சீசன் 3 க்கு ஒரு சாண்டி போல இந்த சீசனில் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வருகிறார் ராஜு. இப்படி ஒரு நிலையில் இவர் Unseen வீடியோக்களில் கூட காமெடிகளை பொலிந்து வருகிறார்.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸ் ரியல் எபிஸோடை விட Unseen வீடியோகளில் தான் எக்கசக்க கண்டன்ட். இதனை விஜய் ம்யூஸிக்கில் அடிக்கடி போட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா அனைவரிடமும் சின்ன வயதில் நீங்கள் எந்த நடிகையை கல்யாணம் செய்து கொள்ள நினைத்தீர்கள் என்று கேட்டு வந்தார்.

அப்போது இந்த கேள்வியை ராஜுவிடம் கேட்ட போது, நான் இந்த மாதிரி எல்லாம் கிடையாது. அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சது ரம்பாவ கல்யாணம் பண்ணனும்னு தான் நெனச்சேன் என்று கூறியுள்ளார். ராஜு, 12 வருடங்களுக்கு மேலாக தாரிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement