சன் டிவி Anchor, மெட்டி ஒலி சீரியல் பிரபலம், வட சென்னை கானா பாடகர் – பிக் பாஸ் 6 போட்டியாளர்கள் அப்டேட்.

0
246
biggboss6
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்த ஒரு புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டாப் லிஸ்டில் இருப்பது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று உலகம் முழவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களுடைய சம்பளம் மற்றும் பிற விஷயங்களை பிக் பாஸ் குழு இறுதி செய்து வருகின்றனர். அதேபோல் போட்டியாளர்கள் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட், ரக்ஷிதா, விசித்ரா, விஜே அர்ச்சனா, ஜிபி முத்து, சிவகுமார், நடிகை ஜாக்குலின், தீபா சங்கர், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகர் மகேஷ், சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர், அமுதவாணன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா என்று பல பேர் வெளியாகி இருக்கிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புதிய அப்டேட்:

இந்த முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை வழக்கமானதை விட அதிகமாக்கி இருக்கிறார்கள். மக்கள் போட்டியாளர்கள் என ஆறு பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சில பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.

விஜே கதிரவன்:

எம்பிஏ முடித்துவிட்டு மீடியாவுக்குள் வந்தவர் கதிரவன். இவர் சன் டிவியில் நட்புக்காக, வணக்கம் தமிழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மணிகண்டன்:

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன். இவர் சின்னத்திரை ரசிகர்களுக்கு பிரபலமானவர் என்று சொல்லலாம். இவர் நடன நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய மனைவி சோபியாவுடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார்.

வசந்த்:

வடசென்னை கானா பாடகர் தான் வசந்த். இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் இவருடைய கானா கச்சேரி கலைக்கட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சந்தர்:

இவர் ஒரு மாடல் ஆவார்.

மெட்டிஒலி சாந்தி:

அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடலின் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சாந்தி. இவர் தற்போது சீரியல்களில் வில்லியாக மிரட்டி வருகிறார்.

Advertisement