பிக் பாஸ் சீசன் 6ல் இரண்டு முத்துக்கள் – அதில் ஒரு முத்து கேட்ட சம்பளம். அடம்பிடிக்கும் அந்த ஒரு நபர்.

0
489
gpmuthu
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நுழையப்போவது ஜிபி முத்துவா? மதுரை முத்துவா? என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை 5 சீசன் முடிவடைந்து இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-
biggboss6

இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தனர். இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. பின் இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6:

ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது. அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது.

madurai-muthu

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்கள்:

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். அதே சமயம் டிஸ்னி பிளஸ் ஸ்டார் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களுடைய சம்பளம் மற்றும் பிற விஷயங்களை பிக் பாஸ் குழு இறுதி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் மதுரை முத்து கலந்து கொண்டிருக்கிறாரா? என்று மதுரை முத்துவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறியிருந்தது, மதுரை முத்து அண்ணனை இந்த சீசனுக்கு அழைத்தது உண்மைதான்.

-விளம்பரம்-

மதுரை முத்து முடிவு:

அண்ணனும் இதுகுறித்து பல நாட்களாக யோசனை இருந்தார். பின் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் நிகழ்ச்சிக்கு போகலாமா? வேண்டாமா? என்று ஆலோசனையும் செய்திருந்தார். ஆனால், சேனல் தரப்பில் இருந்து தொடர்ச்சியாக கலந்து கொள்ள அழைப்பு வந்து கொண்டிருந்தது. பின் மதுரை முத்து அண்ணனும் முதல் கட்டமாக பேசிப் பார்க்கலாம் என்று சென்றிருந்தார். அப்போது மதுரை முத்து கேட்ட சம்பளத்தையே சேனல் தரப்பில் தருவதாக சம்பாதித்து விட்டார்கள். அதனால் மதுரை முத்து அண்ணா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவார் என்று கூறியிருந்தார்கள்.

தீவிர ஆலோசனையில் பிக் பாஸ் குழு:

இன்னொரு பக்கம், பிக் பாஸ் டீம் மதுரை முத்துவிற்கு முன்பே டிக் டாக் மற்றும் youtube பிரபலமான ஜிபி முத்துவுடன் பேசி அவரையுமே இந்த சீசனில் கலந்து கொள்ள சம்மதிக்க வைத்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இதை தெரிந்து கொண்ட மதுரை முத்து, அந்த ஆள் இருக்கிற ஷோவில் நான் கலந்துகிறதா? ஆணியே புடுங்க வேண்டாம். நீங்க லட்ச ரூபாய் சம்பளம் தந்தாலும் வேண்டாம் சாமி என சொல்லிவிட்டாராம். ஆகவே, நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஜி பி முத்துவா? மதுரை முத்துவா? என்று சேனல் தரப்பிலிருந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் யார் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று உங்களின் முடிவை கமெண்டில் சொல்லுங்கள்.

Advertisement