வண்ண வண்ண செட், பிக் பாஸ் 6ன் பிரம்மாண்ட வீடு – Exclusive புகைப்படங்கள் இதோ.

0
373
biggboss
- Advertisement -

விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் தமிழ் 6 வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் முதல் பரிசை பாலாஜி முருதாசும், இரண்டாம் பரிசை நிரூப்பும் பிடித்து இருந்தார்கள். இதனை அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ஆரம்பித்து விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அதேபோல் கமல் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுடனும் பேசி அவர்களுடைய சம்பளம் மற்றும் பிற விஷயங்களை பிக் பாஸ் குழு இறுதி செய்து வருகின்றனர். இந்நிலையில் போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

  1. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். இவர் வத்திக்குச்சி வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார்.
  2. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்த ரக்ஷிதா.
  3. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான விசித்ரா.
  4. ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா.
  5. சோசியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து.
  6. நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார்.
  7. நடிகை ஜாக்குலின்
  8. தீபா சங்கர்.
  9. சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி
  10. தர்ஷா குப்தாவிஜே மகேஸ்வரி
  11. அந்தோணி தாசன்
  12. மைனா நந்தினி
  13. கூல் சுரேஷ்
  14. நடிகர் மகேஷ்
  15. சமீபத்தில் நடிகை மகாலக்ஷ்மியை திருமணம் செய்த ரவீந்தர்
  16. அமுதவாணன் இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகை ஆயிஷா கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement