பிக் பாஸில் நுழையும் முன்னே குவியும் ஆர்மி – யாருக்கு தெரியுமா ? இதோ விவரம்.

0
541
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் ஆர்மி யாருக்கு தொடங்க இருக்கு என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல எதிர்பார்களுடன் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதோடு பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை பற்றி அறிய எதிர்நோக்கி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பிக் பாஸ் ஆர்மி:

மேலும், சில போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யாருக்கு ஆர்மி தொடங்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்குவது வழக்கமான ஒன்றுதான். இதை முதன் முதல் சீசனிலேயே ஓவியாவின் மூலம் ரசிகர்கள் தொடங்கி வைத்திருந்தார்கள். அதனை தொடர்ந்து பல போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கியிருந்தது. இதனால் சோசியல் மீடியாவில் சில வாக்குவாதமே ஏற்பட்டிருக்கிறது.

ஜனனி குறித்த தகவல்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு ஆரம்பி தொடங்கவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பலரும் ஜனனி பெயரை குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர் இலங்கை தமிழர் ஆவார். ஏற்கனவே இலங்கை தமிழராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா, மதுமிதாவிற்கு ஆர்மி தொடங்கப்பட்டிருந்தது. இவர்களை தொடர்ந்து இந்த முறை நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொள்ள இருக்கிறார். இவர் எத்தனை நாள் நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்கிறார்? இவருக்கு ஆர்மி உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement