பிக் பாஸ் 6ன் smoking ரூம் இது தான் – உள்ளே சென்ற பெண் போட்டியாளர். யார் பாருங்க.

0
1026
smooking
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ல் சுமோகிங் அறையில் மகேஸ்வரி, ராம் இருந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

நிகழ்ச்சியின் இரண்டாம் வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது. அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார். மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த போட்டியாளர் இறுதிவரை கதையை சொல்லி முடிக்கிறாரோ அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

ஸ்மோக்கிங் அறை:

இதனால் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, அனைவரும் பிக் பாஸ் வீட்டில் எதிர்பார்த்து இருந்த இடமே ஸ்மோக்கிங் அறை தான். ஒவ்வொரு சீசனிலும் அதற்காக ஒரு இடம் வைத்திருக்கிறார்கள். அங்கு கேமரா கிடையாது. கடந்த சீசனில் இருந்து தான் இந்த அறை குறித்து அதிகமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தது. இந்த முறையும் ஸ்மோ ஸ்மோக்கிங் அறை வைக்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்திற்கு பக்கத்திலேயே இந்த அறை வைக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விஜே மகேஸ்வரி-ராம்:

இந்நிலையில் இந்த அறையில் விஜே மகேஸ்வரியும், ராமும் இருந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜேவாக தன்னுடைய கேரியரை தொடங்கியவர் மகேஸ்வரி. பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக விஜய் மகேஸ்வரி நடித்திருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.

ஸ்மோகிங்கில் அறையில் மகேஸ்வரி-ராம்:

மேலும், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ராம், விஜே மகேஸ்வரிடம் வழிந்து ஸ்வீட்டாக பேசியது அனைவருக்குமே தெரிந்தது. இது குறித்து மகேஸ்வரி கேட்டதற்கும் அவரிடம் மழுப்பியவாறு பதில் அளித்துவிட்டு சென்றார். தற்போது இருவருமே நெருக்கமாக பழக தொடங்கி விட்டார்கள். இந்த முறை ராம்- மகேஸ்வரி காதல் கதை தான் பிக் பாஸ் வீட்டில் பேசப்படும் என்று ரசிகர்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஸ்மோக்கிங் அறையில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

Advertisement