கேப்டன் ஆகிய அமுதவாணனை ஏமாற்றி பிக் பாஸ் – இந்த வாரம் நாமினேட் ஆன 8 நபர்கள் – இந்த மூனு பேர்ல யார் போவாங்க ?

0
404
bb
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ஜிபி ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருந்தனர்.பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.

-விளம்பரம்-

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் இருந்து ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனில் ஜனனி வெளியேற்றப்பட்டார். ஜனனியின் வெளியேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் கடந்த வாரம் வரை மொத்தம் 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில் நிலையில் வெளியேறப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தது

- Advertisement -

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் ரச்சித்தா, ஆகி இருந்தனர். இதில் மிச்சர் கூட்டத்தை சேர்ந்த கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். ஒரு புறம் வெறுப்பை சந்தித்தாலும் மறுபுறம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தனலட்சிமி வெளியேறினார்

-விளம்பரம்-

இந்த நிலையில் 9 பேர் மட்டுமே இருப்பதினால் 2 போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது இதில் ரட்சித்தாவை தவிர விக்ரமன், அமுதவாணன், அசீம், ஷிவின், எடிகே, மணிகண்டன், கதிரவன், மைனா நந்தினி என அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இந்த வாரம் மணிகண்டன், Adk, அமுதவாணன் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement