பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசனில் தான் டைட்டல் வின்னருக்கு குறைவான பரிசுத்தொகை – என்ன காரணம் தெரியுமா ?

0
780
BiggBoss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றோடு நிறைவு பெற இருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக பணப் பெட்டி டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும் பிக் பாஸ் ஒவ்வொரு கட்டமாக தொகையை ஏற்றிக்கொண்டு இருக்க அதை யார் எடுத்தச் செல்வார் என்ற ஒரு ஆர்வம் ஏற்படும். அந்த வகையில் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப் பை டாஸ்க் ஒரு சில நாட்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

3 லட்சத்துடன் வெளியேறிய கதிர் :

ஆனால், ஆரம்ப தொகையான 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கதிர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாம் முறையாக பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுஇருந்தது. இந்த முறை ஒரு ஒரு நிமிடத்திற்கும் பணத்தின் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். எனவே இந்த முறை பணப்பெட்டி தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுது:

இப்படி ஒரு நிலையில் இன்று 11,75,000 பணத்துடன் அமுதவாணன் வெளியேறிவிட்டார். அமுதவாணன் பணப் பெட்டியுடன் வெளியேறியதால் நேற்றைய நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையே மைனா நந்தினி இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

டாப் 3 Finalist :

இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகி இருக்கிறார்கள். இந்த சீசனில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.இப்படி ஒரு நிலையில் கடந்த சீசன்களை விட இந்த சீசனில் தான் பிக் பாஸ் வெற்றியாளருக்கு குறைவான பரிசுத்தொகை வழங்க இருக்கிறது.

சீசன் 6 பரிசுத் தொகை :

பிக் பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் கதிரவன் ஏற்கனவே பணப்பை டாஸ்க்கில் எடுத்ததால் 3 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதே போல இரண்டாம் பணப் பெட்டி டாஸ்கில் 13 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறியதால் அந்தப் பணமும் கழிக்கப்பட்டு, வெற்றியாளருக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ.34 லட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement