சன் டிவி To விஜய் டிவி – பிக் பாஸில் WILD CARD போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அன்னபாரதி யார் தெரியுமா?

0
579
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளர் என்ட்ரி குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது இரண்டு வீட்டிலுமே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஐந்து பேர் வைல்ட் கார்ட் போட்டியாளராக என்ட்ரி ஆக இருப்பதை பக்பாஸ் அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி ஆக இருக்கும் ஒருவர் தான் அன்னபாரதி.

வைல்ட் கார்ட் என்ட்ரி அன்ன பாரதி

இவர் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகை. இவருக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். பேச்சு போட்டி, எழுத்துப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, நினைவாற்றல் போட்டி என பல போட்டிகள் பங்கேற்று பரிசும் பெற்று இருக்கிறார். இதனாலே தான் இவர் பட்டிமன்றத்தில் தேர்வு செய்து வந்தார். இவர் எம்எஸ்சி, எம்பில் எலக்ட்ரானிக்ஸ் படித்திருக்கிறார். இவர் முதலில் hdfc பேங்கில் ஒரு வருடமாக வேலை செய்திருந்தார்.

-விளம்பரம்-

அன்ன பாரதி குறித்த தகவல்:

அதற்கு பின் ஆல் இந்தியா ரேடியோவில் சிசிஏவாக பணிபுரிந்தார். பின் இவர் முதன்முதலில் மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பிறகு தமிழன் டிவி அலசல் மேடை, கே டிவியில் மங்கையர் மன்றம் என பல பட்டிமன்றங்கள், நகைச்சுவை பட்டிமன்றங்கள் என்று பல நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார். குறிப்பாக, மதுரை முத்துவுடன் இணைந்து இவர் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்.

அன்ன பாரதி செய்த நிகழ்ச்சிகள்:

மேலும், இவர் இந்தியாவில் மட்டும் இல்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன், குவைத், மஸ்கட் போன்ற வெளிநாட்டுகளிலும் தன்னுடைய கலைப்பயணத்தின் மூலம் தமிழர்களை மகிழ்வித்து இருக்கிறார். இவர் சன் டிவியில் காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா, லொள்ளுப்பா, ஆதித்ய நகைச்சுவையில் பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண் வர்ணனையாளராக அன்னபாரதி பங்கேற்றுந்தார். இதில் இவருடைய குரலை கேட்டு பலருமே பாராட்டி இருந்தார்கள். தற்போது இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

Advertisement